Wednesday, October 31, 2007

கீரை தால் ஃப்ரை

கீரை தால் ஃப்ரை (கீரை தக்காளி பருப்பு):

(படங்கள் இன்னும் வலையேற்றப்படவில்லை)


தேவையான பொருட்கள்:


பசலைக் கீரை/Spinach - 1 கட்டு
பயத்தம்பருப்பு - 1/2 கப்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
கருவேப்பிலை - 1 ஆர்க்கு
மஞ்சள்பொடி - சிறிதளவு

தாளிக்க:


கடுகு
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்

செய்முறை:

  • முதலில் பயத்தம்பருப்பை குக்கரில் (குழையாமல்) வேகவைத்துக் கொள்ளவும்.
  • தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கீரையையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை தாளித்துக் கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய தக்காளி + பச்சைமிளகாய் + இஞ்சியை போட்டு மஞ்சள்பொடி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். கீரை வெந்தவுடன், கரண்டி அல்லது மத்தினால் நன்கு மசிக்கவும்.
  • தேவையான் அளவு உப்பைப் போட்டு, வேகவைத்த பருப்பையும் சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • கறிவேப்பிலையை கடைசியில், அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்னால் போட்டால் மிகவும் வாசனையாக இருக்கும்.

5 comments:

Sanjai Gandhi said...

Indiragandhi, Amitap Bhachan, Naya Sansar


( Puriyuhta? :P )

( elavasam quiz )

A Traveller said...

நன்றி. இப்போது தான் பார்த்தேன். ஆனால் அது சரியான விடை கிடையாது என்று நினைக்கிறேன்..

Sanjai Gandhi said...

அது மிகச் சரியான பதில். ஆதாரம் வேண்டுமா?
http://www.imdb.com/name/nm0000821/bio

http://www.ultraindia.com/movies/filmography/filmography.php?choice=1&na=SAAT%20HINDUSTANI

( என்ன கொடுமை இது? )
நேத்து நான் அங்க சொன்ன எல்லா பதிலுமே சரி. அத பாத்துமா என் மேல நம்பிக்கை வரல ஆண்ட்டி? :((

please remove the word verification option.

Sanjai Gandhi said...

வாழ்த்துக்கள் ஆண்ட்டி :)
எதுக்குன்னு புரியுதுல? :)

Geetha Sambasivam said...

ரொம்ப வருஷமா வலை உலகிலே இருக்கீங்களா? ஆனா இன்னிக்குத் தான் என்னோட வலைப்பக்கம் உங்களைப்பார்த்தேன். :)